உடையார் பாகம் 1, 2, 3, 4, 5, 6 - Udayar Paagam 1, 2, 3, 4, 5, 6, Buy Tamil Books Online

உடையார் பாகம் 1, 2, 3, 4, 5, 6

Tamil Name: Udayar Paagam 1, 2, 3, 4, 5, 6

 
Categories: Combo Packs | Historical Novels | Best Sellers |
Author: Balakumaran
Publisher: Thirumagal Nilayam
Product Code: MATN092
Availability: Instock (Ships in 1 - 2 Days)
Price: Rs.1,910.00
MyAngadi.com offers free home delivery for order value greater than Rs.1000, otherwise Rs.60 will be added for shipping*.
Qty:     - OR -   Add to Wish List
Please note: All products sold at MyAngadi.com are 100% brand new.

Need Help in buying from MyAngadi.com. Please Call @ +91-83441 43220. (10AM - 8 PM IST)
Description of

உடையார் பாகம் 1, 2, 3, 4, 5, 6 - Udayar Paagam 1, 2, 3, 4, 5, 6



உடையார் என்பது பாலகுமாரன் எழுதிய வரலாற்றுப் புதினம் ஆகும். ஆறு பாகங்களை உடைய (177 அத்தியாயங்கள்) இப்புதினம் முதலில் இதயம் பேசுகிறது வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது. பின்னர் விசா பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது. தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்ட வரலாற்றை, கற்பனை நயத்தோடு, மாமன்னர் இராஜராஜ சோழனை நாயகனாகவும் அவரது மனைவி பஞ்சவன்மாதேவியை நாயகியாகவும் கொண்டு எழுதப்பட்டது.

கல்கியின் பொன்னியின் செல்வன் ராஜராஜ சோழனின் இளம் பருவத்தைச் சிறப்பாகச் சொல்லிய புதினம் ஆகும். பாலகுமாரனின் உடையார் புதினம், ராஜராஜ சோழனின் ஆட்சி செய்த காலகட்டத்தையும் குறிப்பாக தஞ்சை பெரிய கோயில் கட்ட எடுத்துக்கொண்ட முயற்சிகள் மற்றும் கட்டப்பட்ட விதம் ஆகியவற்றையும் கதைக்களமாகக் கொண்டுள்ளது.

தஞ்சை பெரிய கோவில், தமிழராய்ப் பிறந்த அனைவரும் கொண்டாடும் ஒரு அற்புதமான சோழர் கால வரலாற்றுச் சான்று. அளப்பரிய பொறியியல் கருவிகளும் வளர்ச்சியும் இருந்திராத காலத்தில் மிகப்பெரிய, துல்லியமான கற்றளி எழுப்பப்பட்ட விதம் அனைவருக்கும் ஆச்சர்யமளிக்கும் விஷயமாகும். தமிழகத்தைப் பற்பல சோழ, பாண்டிய, பல்லவ மற்றும் சேர மன்னர்கள் ஆண்டிருந்தாலும், ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் தமிழகத்தின் பொற்காலமாகக் கருதப்படுகிறது. ராஜராஜர் கோவில் கட்டியதால் மட்டுமல்லாமல் நிலவரி, கிராமசபை, குடவோலை முறை பற்றும் பல சமுதாய முன்னேற்றங்களாலும் மிகச்சிறந்த மன்னர்களுள் ஒருவனாக கருதப்படுகிறார். மேற்குறிப்பிட்டுள்ள விஷயங்கள் இந்தப் புதினம் எழுதுவதற்க்கான உந்துதல்களில் சிலவாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

தஞ்சை பெரிய கோவில் கட்ட முடிவெடுத்து வரைபடங்கள் தயார் செய்து , காஞ்சியிலிருந்து அனுப்புகிறார்கள். தஞ்சைகருகில் தேவரடியார்கள் வந்த வண்டி காவிரியாற்றில் குடை சாய்ந்துவிடுகிறது. ஆனாலும் வரைபடங்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் அவற்றை காப்பாற்றுகிறார்கள். கோவில் கட்ட குஞ்சரமல்லர் நேர்த்தியான நிலத்தை தேர்ந்தெடுக்கிறார். நிலத்தை அளந்து எல்லைகளைத் தீர்மானிக்கிறார்கள். கோவில் கட்டத் தேவையான பறைகளை நார்த்தாமலையிலிருந்து வெட்டிஎடுக்கிறார்கள். கோவில் கட்ட குஞ்சரமல்லரின் சீடர்களான குணவனும், இலத்தி சடையனும் அரும்பணிபுரிகிறார்கள் .

ராஜேந்திரர் போர்க் கைதிகளை, அவர்களின் விருப்பத்துடன் கோவில் பணிக்குத் தஞ்சைக்கு அனுப்புகிறார். சிற்பிகள் கோவிலுக்கு சிலை வடிக்க மாதிரிக்காக எல்லா ஊர்களிலிருந்தும் தளிச்சேரிப் பெண்கள் வருவிக்கபடுகிறார்கள். நடு நாட்டு பிராமணர்கள் மற்றும் தொண்டை நாட்டு பிராமணர்கள் தஞ்சைக்கு வருகிறார்கள். அதனை தஞ்சை பிராமணர்கள் விரும்பவில்லை மற்றும் அவர்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் விரட்டுகிறார்கள்.

எல்லா தரப்பினரும் கோவில் கட்ட தாமாக முன்வந்து உதவுகிறார்கள். நார்த்தாமலையில் பறைகளை கணக்கிட கணக்கர்கள் தேவைபடுகிறார்கள். வைணவதாசன் அறிவுரை செய்தும் தஞ்சை அந்தணர்கள் கணக்கெழுத மறுக்கிறார்கள். அருண்மொழி பட்டன் நடுநாட்டு அந்தணர்களை கணக்கெழுத பணிக்கிறான். குஞ்சரமல்லர் சவுக்கு கட்டையில் சாரம் கட்டி கற்களை மேலே எடுத்துப் போகலாம் என்கிறார். குணவன் அதற்கு மாற்றாக மண்ணால் சுற்றுப்பாதை அமைத்து கற்களை மேலே கொண்டு செல்லலாம் என்று சொல்லி அதற்கு மாதிரி செய்து காண்பிக்கிறான்.

கோவில் கட்ட போதுமான நிதி இல்லாமல் பற்றக்குறை ஏற்படுகிறது. மற்றும் மேலை சாளுக்கியம் சோழ நாட்டின் மேல் படை எடுக்க முயற்சிக்கிறது. இதனை தடுக்கும் பொருட்டு, ராஜராஜர் தலைமையில் படையெடுப்பு எற்படுகிறது. மேலைச் சாளுக்கியத்தை வென்று பெரும் பொருளோடு திரும்புகிறது சோழப் படை. கோவில் பணி நிறைவடையும் தருவாயில், லிங்கத்தை ஸ்தாபிப்பதில் பிரச்சனை உண்டாகிறது. கரூர்தேவர் முன்னின்று லிங்கத்தை ஸ்தாபிக்கிறார். கோவிலைப் பராமரிக்க நிலங்களை நிவந்தங்களாக ராஜராஜர் அளிக்கிறார். மற்றும் கோவில் கட்ட உதவியவர்கள் எல்லோர் பெயரையும், கோவில் சுவற்றில் வடிக்க உத்தரவிடுகிறார். கோவிலில் நடனமாடிய தலைக் கோலிகள் எல்லோர் பெயரையும் அவர்களின் ஊர்களையும் கோவில் சுவற்றில் வடிக்க சொல்கிறார்.

பாண்டிய ஆபத்துதவிகள் சிலர் ராஜராஜரைக் கொல்ல முயற்சிகிறார்கள், ஆனால் அது முடியாமல் போகிறது. சில காலம் கழித்து ராஜேந்திரருக்கு முடி சூட்டிவிட்டு ,உடையார்குடிக்கு குடிபெயர்கிறார் ராஜராஜர் .

Review of

உடையார் பாகம் 1, 2, 3, 4, 5, 6 - Udayar Paagam 1, 2, 3, 4, 5, 6



Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad           Good

Enter the code in the box below:



Tags: Udaiyaar Paagam 1, 2, 3, 4, 5, 6


Buy Tanjore Paintings, Tamil Books,
CDs and DVDs Online @ MyAngadi.com.

Powered by Penmai.com.

MyAngadi.com © 2014. All Rights Reserved.