{"title":"Computer","description":null,"products":[{"product_id":"computer-a-to-z-vikatan-publications","title":"கம்ப்யூட்டர் A to Z","description":"பத்து கைகள் இருந்தாலும் சாத்தியப்படாத வேலைகளை, நிமிடங்களில் முடித்துத் தரக்கூடிய கம்ப்யூட்டர் இன்றைய அவசர யுகத்தில் ஒரு வரப்பிரசாதம். ரயில் டிக்கெட், பஸ் டிக்கெட், சினிமா டிக்கெட்டில் ஆரம்பித்து, இன்று நமது அன்றாடத் தேவைகள் பலவற்றைக் கண் மூடித் திறக்கும் நேரத்தில் கச்சிதமாகச் செய்து முடித்துக் கொடுக்கும் ஆற்றல் கம்ப்யூட்டருக்கு உண்டு. சட்டைப் பையிலேயே ‘பாக்கெட் அளவு கம்ப்யூட்டர்’ வைத்திருக்கும் காலம் இது. சூரியனைப் பற்றியும் சூரியனுக்குக் கீழுள்ள அத்தனை விஷயங்கள் பற்றியும் படிக்க, படங்களாகப் பார்க்க, படித்ததையும் பார்த்ததையும் சேமித்து வைக்க, புதிய டிஸைன்களை உருவாக்க, கடிதங்கள் எழுத, வர்த்தக தொடர்பு கொள்ள... இப்படி நம் வாழ்க்கைக்குக் கூடுதலான வசதிப் பெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள அடிப்படை கம்ப்யூட்டர் அறிவு என்பது அத்தியாவசியத் தேவை. இந்த அவசியம் கருதித்தான் கம்ப்யூட்டர் பற்றி 'ஏ டூ இஸட்' விஷயங்களை விளக்கி, மிகவும் எளிமையாக இந்த நூலில் கொடுத்திருக்கிறார் காம்கேர் கே.புவனேஸ்வரி. \u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAVI325\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751007092830,"sku":"MAVI325","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/4203_1.jpg?v=1792056269"},{"product_id":"onlineil-a-to-z-vikatan-publications","title":"ஆன்லைனில் A to Z","description":"இரட்டிப்பு மகிழ்ச்சி தரும் இரட்டை குழந்தைகளைப்போல ஆகிவிட்டன நம்  வாழ்க்கையோடு ஐக்கியமாகிவிட்ட கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும். அவசரகதியில் ஓடிக்கொண்டிருக்கும் மனித வாழ்க்கைக்குப் பேருதவி புரியும் சாதனங்களுள் இவையே இன்றைய காலகட்டத்தில் முதல் இடத்தில் உள்ளன. \u003cbr\u003e\u003cbr\u003e அத்தியாவசியத் தேவைகளுக்காகவும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் நாம் கடுமையாக உழைக்க வேண்டிய இன்றையச் சூழலில் மின் கட்டணம், வீட்டுவரி, வருமானவரி எனத் தொடங்கி எல்லாவிதமான தேவைகளுக்காகவும் அலுவலகங்களின் படிகளில் ஏறி இறங்கி அலைவது முடியாத ஒன்று. அதுபோன்ற அலைக்கழிப்புகளில் இருந்தும், அவஸ்தைகளில் இருந்தும், கால விரயத்தில் இருந்தும் விடுதலை வாங்கிக் கொடுத்துள்ளது கம்ப்யூட்டரோடு இணைந்த இன்டர்நெட் எடுத்திருக்கும் ஆன்லைன் அவதாரம். இன்டர்நெட் வசதியோடு கம்ப்யூட்டர் இருந்துவிட்டால் எத்தனையோ வேலைகளை எப்போது வேண்டுமானாலும் வீட்டிலிருந்தே முடித்துக்கொள்ளலாம். அதிலும் லேப்டாப்பும் டேட்டா கார்டும் இருந்துவிட்டால், ஆன் தி வே-யில் ஆன்லைனில் அசத்தலாம், அவசியமான பல வேலைகளை அநாயாசமாகச் செய்து முடிக்கலாம். இது மட்டுமல்ல... பலரது வருமானத்துக்கும் வழி தேடிக் கொடுத்துள்ளது ஆன்லை சேவை. அத்தகைய ஆன்லைன் சேவைகளின் பன்முகச் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி குறித்த பல தகவல்களுடன், எளிமையான வார்த்தைகளால் இந்த நூலை உருவாக்கியுள்ளார் நூலாசிரியர் காம்கேர் கே.புவனேஸ்வரி. ஆன்லைன்பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள்கூட, எளிமையாகக் கையாளும் விதமாக படிப்படியாக விளக்கப் படங்களுடன், அடுத்தடுத்த செயல்முறைகளைத் தெளிவாகக் கொடுத்திருப்பது இந்த நூலின் தனிச் சிறப்பு.\u003cbr\u003e\u003cbr\u003e எல்லாமே இணையமயமாக மாறிவரும் காலகட்டத்தில் வாழ்ந்து வரும் ஒருவர், இணையத்தில் ஆன்லைன் சேவைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள முனைவதும், ‘ஆன்லைன் ஜாப்’ செய்ய விரும்புவதும், அதற்கான தளத்தினைத் தேடி அலைவதும்  ஆச்சர்யம் இல்லை, இது காலத்தின் கட்டாயம். நிச்சயமாக ஒரு சில வருடங்களில் ஏராளமான பணிகள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில்தான் நடக்க இருக்கின்றன.  \u003cbr\u003e\u003cbr\u003e ஆகவே, விரைவில் பெரும்பான்மையான பணிகள் ஆன்லைனில் வீட்டிலிருந்தபடியே செய்வதற்கு உகந்த பணியாக மாறிவிடும். அப்படிப்பட்ட மாற்றத்துக்குத் தகுந்தபடி நம்மை மாற்றிக்கொள்ளவும், ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்திக்கொள்வதற்கான அடிப்படை புரிதலை நம்முள் ஏற்கவும் இந்த நூல் அற்புதமான வழிகாட்டி!\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAVI318\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751007649886,"sku":"MAVI318","price":180.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/4196_1.jpg?v=1792056278"},{"product_id":"tamil-moolam-computer-basic-mozhi-karkalam-narmadha-pathipagam","title":"தமிழ் மூலம் கம்ப்யூட்டர் BASIC மொழி...","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANA546\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751162151006,"sku":"MANA546","price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/1496_1.jpg?v=1792057411"}],"url":"https:\/\/www.myangadi.com\/collections\/computer.oembed","provider":"My Angadi","version":"1.0","type":"link"}