{"title":"Translation","description":null,"products":[{"product_id":"idhu-periyavanga-ulagam-vikatan-publications","title":"இது பெரியவங்க உலகம்!","description":"\u003cp\u003eபல நாடுகளில் முதியோர்களின் எண்ணிக்கை பெருகி வருவது, அந்தந்த நாடுகளின் அரசியல், ராணுவம், தொழிற்சாலை போன்ற அனைத்து துறைகளிலும் பெரும் பிரச்னைகளை உருவாக்கி இருக்கிறது என்பதை ஆராய்ச்சிபூர்வமாக விவரிக்கும் நூல்தான் ‘இது பெரியவங்க உலகம்!’ இன்றைய உலகின் ஜனத்தொகையில் முதியவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயத்தில், சமூக உறவில் அவர்கள் பெற்றிருக்கும் அந்தஸ்து, சிக்கல்கள் நிரம்பியதாகவே உள்ளது.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஉறவு மாற்றம், உணவு மாற்றம், பணியிடம் மாற்றம், உடல்நிலை மாற்றம் அதோடு இன்றைய தலைமுறையின் கலாசார மாற்றம் என பல மாற்றங்களுக்கு ஏற்ப தங்களையும் மாற்றிக்கொள்ளவோ, அனுசரித்துச் செல்லவோ அவர்களால் முடிவதில்லை. மாறிவரும் விஞ்ஞான உலகின் புதிய வளர்ச்சியும் வயோதிகர்களை மிரட்டத்தான் செய்கின்றன. தொழில்நுட்பரீதியான வசதிகளை பயன்படுத்திக் கொள்வதில் அவர்கள் தயக்கம் காட்டுவது உண்மைதான். கலாசார மாற்றத்தையும் ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறார்கள். காரணம், சீராகச் சென்று கொண்டிருக்கும் தங்களது வாழ்க்கை, தடம் மாறி சிக்கலில் மாட்டிக்கொண்டு விடுமோ என்கிற பயம்தான். \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAVI149\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751019151454,"sku":"MAVI149","price":95.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/4027_1.jpg?v=1792056440"},{"product_id":"udaindha-kannadigal-vikatan-publications","title":"உடைந்த கண்ணாடிகள்","description":"\u003cp\u003eதனிமனித சுதந்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் இன்றையக் காலகட்டத்தில், புதுமணத் தம்பதிகள் விட்டுக் கொடுத்து வாழ்வது என்பதே இல்லாத ஒன்றாகிவிட்டது. கட்டுப்பாடான வாழ்க்கை முறைக்கும், நவீனகால நடைமுறைக்கும் இடையில் தொடங்கும் மோதல், நாளடைவில் பரஸ்பர உறவுகளிடையே குற்றம் காணும் சூழ்நிலையை உருவாக்கிவிடுகிறது. உறவுகளிடம் நிலவும் கௌரவப் பிரச்னை, உணர்வு ரீதியான பொருத்தமின்மை, உடலுறவு சம்பந்தமானப் பிரச்னை, குழந்தைப் பேறின்மை தொடர்பான பதட்டம்... இப்படி, குடும்ப வன்முறைகளின் உச்சமாக மரணங்கள் சம்பவிப்பது தற்போது சர்வ சாதாரணமாகிவிட்டது.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eவரதட்சணைக் கொடுப்பது பற்றி பெண் வீட்டாரின் விளக்கம், தம்பதியரிடையே ஏற்படும் மனக்கசப்புக்கான காரணம், பாரம்பரியமாக இருந்துவரும் மாமியார் - மருமகள் யுத்தத்துக்கான பின்னணி, இதில் கணவனின் பங்கு, இதற்கு சமூகத்தின் பார்வையில் உள்ள பதில், சட்டரீதியான நடைமுறைகள்... போன்ற குடும்பப் பிரச்னைகளுக்கான தெளிவான தீர்வுகளை ‘BROKEN MIRRORS’ என்ற ஆங்கில நூலில் விளக்கியுள்ளனர் நூலாசிரியர்கள் ராபின் வியாத் மற்றும் நஸியா மஸூத்.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஆங்கில நூலின் சாரத்தை உள்வாங்கி, அதன் அழகும் ஆழமும் குலையாதபடி அழகு தமிழில் மொழிபெயர்த்துள்ளார் லதானந்த். அத்தியாயம் தோறும் ‘கலந்தாய்வுக் குறிப்புகள்’ என்ற தலைப்பின் கீழ் அந்தந்தப் பிரச்னையின் பல்வேறு கோணங்களையும், அதன் பிரதிபலிப்புகளையும் அலசி ஆராய்ந்திருப்பது இந்த நூலுக்கே உரிய தனிச்சிறப்பு. ‘வரதட்சணை, வாழ்வைக் கெ(ா)டுக்குமா?’ என்ற கேள்விக்கு விடை தெரியாமல் தவித்து நிற்கும் ஒவ்வொருவருக்கும் இந்த நூல் நல்ல வழிகாட்டி.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAVI115\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751019708510,"sku":"MAVI115","price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3993_1.jpg?v=1792056447"}],"url":"https:\/\/www.myangadi.com\/collections\/translation.oembed","provider":"My Angadi","version":"1.0","type":"link"}