
- Stock: Available (Ships in 4 - 7 Days)
- Model: MABH002
இறைவனை மட்டுமல்ல, கேட்பவர் அனைவரையும் பரவசப்படுத்த முடிந்த இந்த மகா புருஷர்களைப் பெயரளவில் மட்டுமல்லாமல் இன்னும் அதிகமாய் அறிந்து கொள்ள இந்தச் சிறிய நூல் உதவும்.
சியாமா சாஸ்திரி, தியாகராஜர்
மற்றும் முத்துசாமி தீட்சிதர்
ஆகியோர் சங்கீத மும்மூர்த்திகள்
என்று அழைக்கப்பட்டவர்கள்.
இவர்கள் மூவரும் இசைச்
சக்கரவர்த்திகள், சமகாலத்தவர்கள்,
திருவாரூரில் பிறந்தவர்கள்.
மூவரின் இசையும் கர்நாடக
சங்கீதத்தின் ரத்தினங்களாக
இன்றைக்கும் ஜொலித்துக்
கொண்டிருக்கின்றன.
அமரத் தன்மை வாய்ந்த
பாடல்களைத் தந்த இவர்களை
இவர்களுடைய இசையால்
மட்டுமல்லாமல், வாழ்க்கை வரலாறு
மூலமாகவும், இவர்கள் பாடிய
பாடல்களுக்குப் பின்னால் உள்ள
சுவையான சம்பவங்கள் மூலமாகவும்
அறிந்தால் இவர்களது பாடல்களின்
பின்னுள்ள ஜீவனை மேலும் நன்றாக
நம்மால் உணரமுடியும் அல்லவா?
வாருங்கள், சுமார் 250
ஆண்டுகளுக்கு முந்தைய
காலத்திற்குப் பயணிப்போம்.....
For International Shipping Charges and Procedures Please check this link,
https://www.myangadi.com/international-shipping or call us @ 9597999274