
- Stock: In Stock
- Model: MAVI131
காதல் கல்யாணமாக இருந்தாலும், ஏற்பாடு செய்யப்படும் திருமணமாக இருந்தாலும் மண வாழ்க்கைக்குள் நுழையும் முன்பு எக்கச்சக்க எதிர்பார்ப்புகளையும் மீறி, ஜோடிகளுக்கு ஒருவித பயமும் பதற்றமும் ஏற்படுவது இயல்பு. இந்த பயத்தையும் பதற்றத்தையும் விலக்கவும், கலக்கங்களிலிருந்து தெளிவு பெறவும், கவலையிலிருந்து விடுபடவும் உதவும் வகையில் இந்த நூலில் பல்வேறு கோணங்களில் அலசி, ஆராய்ந்திருக்கிறார் விஜய் நாகஸ்வாமி. திருமண வரைபடத்தை வரையறுத்துக் கொண்டு, மணவாழ்க்கையில் அவரவர்களுக்கான இடங்களையும் எல்லைகளையும் வகுத்துக் கொண்டால் முக்கால்வாசி பிரச்னைகள் தீர்ந்துவிடும் என்பதை பதினெட்டு அத்தியாயங்களில் தெளிவாக விளக்குகிறார்.
குறிப்பாக, செக்ஸ் மற்றும் நெருக்கம் தொடர்பாக ஓர் அத்தியாயம் மிக விரிவாகப் பேசுகிறது. ‘நானும் என் குடும்பமும் Vs நீயும் உன் குடும்பமும்’ என்ற அத்தியாயத்தில் மாமியார்/மாமனார்/மருமகளின் உறவு பலப்படுவதற்கு நிறையவே வழிமுறைகள் விரவிக்கிடக்கின்றன. நூலாசிரியர், ஒரு மனநல மருத்துவராகவும் இருப்பதால், தீர்வுத்தேடி தன்னிடம் வரும் திருமணமான ஜோடிகளின் பொதுவான பிரச்னைகளையே நூலில் ‘கேஸ் ஸ்டடி’ மாதிரியாக அங்கங்கே கோடி கட்டியுள்ளார்.
For International Shipping Charges and Procedures Please check this link,
https://www.myangadi.com/international-shipping or call us @ 9597999274