
- Stock: Available (Ships in 4 - 7 Days)
- Model: MABH012
தினத்தந்தி இதழில் வெளிவந்து, இலட்சக்கணக்கான வாசகர்களால் விரும்பி வாசிக்கப்பட்ட தொடரின் நூல் வடிவம்.
“சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியுமா ?
செவி இல்லாமல் இசையை ரசிக்க முடியுமா”
என்பார்கள். பதில், “முடியும்” என்பது தான்!
முடியாது என்றால் முடியாது. முடியும்
என்றால் முடியும். இன்றைக்கும் உலகின்
அத்தனை இசை ஜாம்பவான்களையும் வியக்க
வைக்கும் ஒரு இசைமேதை
பீத்தோவான் தானே! அவர் சிம்பொனி
அமைத்தபோது அவருக்கு இரண்டு காதுகளும்
சுத்தமாய்க் கேட்காது! கேட்கும் திறன்
இல்லாமலேயே இசையின் உச்சத்தைத்
தொட்டு விட்டவர் அவர்.
இப்போது சொல்லுங்கள். காது இல்லாமல்
இசையில் சாதிக்க முடியாதா?
எது இல்லாமலும் ஒரு மனிதனால்
சாதிக்க முடியும். சாதிக்க வேண்டும்
எனும் வேகமும், சாதிக்க முடியும் எனும்
நம்பிக்கையும் இருந்தால் மட்டும் போதுமானது.
இந்தக் கட்டுரைகளில் சொல்லப்பட்டிருக்கும்
உண்மை நிகழ்வுகளில் பெரும்பாலானவை
உங்களுக்குப் புதிதாக இருக்கும் எனும்
நம்பிக்கை எனக்கு உண்டு. வேலையிலும்,
வாழ்க்கையிலும் வெற்றி பெறுவதே உண்மையான
வெற்றி. எனவே தான் கட்டுரைகளில்
உயர்வுக்கான வழியையும், உணர்வுகளின் வலியையும் கலந்தே
பயணிக்க வைத்திருக்கிறேன்.
வாழ்த்துகளுடன்,
சேவியர்.
For International Shipping Charges and Procedures Please check this link,
https://www.myangadi.com/international-shipping or call us @ 9597999274