
- Stock: In Stock
- Model: MAVI207
நாட்டுக்கோழி வளர்ப்பதை, நாகரிகம் கருதி கைவிட்டவர்கள்கூட இன்றைக்குப் போட்டி போட்டுக் கொண்டு வளர்ப்பதற்குக் காரணம், அதில் கிடைக்கும் வருமானம்தான். கணினியின் முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள்கூட பொழுதுபோக்காக _ பகுதிநேர வேலையாக நாட்டுக்கோழி, வான்கோழி, கின்னிக்கோழி, சேவல், வாத்து போன்ற பல்வேறு கால்நடைகளை வளர்த்து விற்பனை செய்பவர்களும் உண்டு. உலக அளவிலான பொருளாதார வீழ்ச்சியைச் சமாளிக்க, இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவிலும் புறக்கடை முறையில் கோழிகளை வளர்க்க ஆரம்பித்துள்ளனர். அதிலும், நாட்டுக்கோழி வளர்ப்பில் நல்ல பலனைக் காண்போர் அதிகம். நாட்டுக்கோழி வகைகள், கோழி வளர்ப்பு முறைகள், கோழிக்குஞ்சுகளை உற்பத்தி செய்யும் முறை, கோழிகளுக்கும் குஞ்சுகளுக்குமான தீவன முறைகள், அலங்காரக்கோழிகளின் மூலம் அதிக வருவாய் பெறும் முறைகள், புறக்கடைக் கோழி வளர்ப்பில் அமெரிக்க முறை... என கோழி வளர்ப்பில் உள்ள ஏராளமான செயல்முறைகளை அனைவரும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் எழுதியிருக்கிறார் நூலாசிரியர் ஜி.பிரபு. கால்நடை மருத்துவர்கள், கோழிப் பண்ணை முதலீட்டாளர்கள்... என பல்வேறு நிபுணர்களின் கோழி வளர்ப்பு அனுபவம் மற்றும் மருத்துவம் குறித்தக் கருத்துகளும், வருமானம் ஈட்டக்கூடிய வழிமுறைகளும் இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டு உள்ளன.
For International Shipping Charges and Procedures Please check this link,
https://www.myangadi.com/international-shipping or call us @ 9597999274