
- Stock: Instock (Ships Immediately)
- Model: MANM039
முழுக்க முழுக்க நீரிழிவு நோயாளிகளை மட்டுமே மனத்தில் வைத்து எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தில், அவர்களுக்கான உணவு முறைகள் மற்றும் உணவுகள் என்னென்ன?
நீரிழிவு நோய்க்கும் உணவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
நீரிழிவு நோயாளிகள் எதைச் சாப்பிடலாம், எதைச் சாப்பிடக் கூடாது?
சர்க்கரைக்கும் செயற்கை இனிப்புகளுக்கும் என்ன வித்தியாசம்?
நீரிழிவு நோயாளிகளுக்கான மாதிரி உணவுகள் என்னென்ன?
உள்ளிட்ட ஏராளமான விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. இவை தவிர, நாம் சாப்பிடும் உணவுப் பொருள்களில் எவ்வளவு குளுக்கோஸ் சத்து இருக்கிறது என்பது குறித்த அட்டவணைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. நூலாசிரியர், டாக்டர் சு. முத்து செல்லக் குமார், 1988-ல் டாக்டர் பட்டம் பெற்றவர். ருக்மணி மருத்துவத் தகவல் மையம் என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன்மூலம் இலவச மருத்துவ முகாம்களை நடத்துவதுடன், இலவச மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கி வரும் இவர், இரண்டு முறை தமிழக அரசின் சிறந்த மருத்துவ நூலாசிரியர் என்ற விருது உள்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.
For International Shipping Charges and Procedures Please check this link,
https://www.myangadi.com/international-shipping or call us @ 9597999274