
- Stock: In Stock
- Model: MAVI179
சுஜாதாவுக்கு எப்போதுமே நான் அதிக அவகாசம் தந்ததாக நினைவில்லை. தொடர்கதையோ... 'ஏன்... எதற்கு... எப்படி?' மாதிரியான தொடர்பகுதியோ... எதுவாக இருந்தாலும், 'இது சுஜாதா செய்தால் சரியாக இருக்கும்' என்று தோன்றிய நிமிடம், நான் தொலைபேசியில் அவரது எண்ணைச் சுழற்றிவிடுவேன். ஒருமுறைகூட அவர் மறுத்ததில்லை. உடனே கிளம்பி வருவார். 'அவுட்லைன்' ஐடியா சொல்வார். விவாதிப்போம். அத்தனை ஆலோசனைகளையும் திருத்தங்களையும் ஏற்றுக்கொண்டு. அவர் புறப்படும்போதே அறிவிப்பு வெளியிட்டுவிடலாம்.
என் பத்திரிகையுலக அனுபவத்தில், எனக்குக் கிடைத்த இனிய நண்பர்களில் முக்கியமானவர் சுஜாதா. அவரது படைப்புகளின் முதல் ரசிகன் என்ற பெருமிதம் எனக்கு எப்போதுமே உண்டு. பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகும் பரபரப்பாக இருக்கிற மனிதர். ராஜீவ்காந்தியுடன் விமானத்தில் சுற்றியவர். ரஜினிகாந்த்துடன் சினிமா பேசியவர். அப்துல்கலாமுடன் நட்பு பாராட்டுபவர். நாட்டுப்புறப் பாடல்களைத் தேடுவார். கம்ப்யூட்டர் கருத்தரங்குகளில் உரையாற்றுவார்.
For International Shipping Charges and Procedures Please check this link,
https://www.myangadi.com/international-shipping or call us @ 9597999274