
- Stock: In Stock
- Model: MAVI353
ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பதோடு வாழ்வின் இனிய பயணம் முடிந்துவிடுவதில்லை. சஷ்டியப்த பூர்த்தி நடந்தும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பரிமாறி ரசிக்க எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன' என்கின்றனர், அனுபவம் வாய்ந்த தம்பதிகள்.
'ரொமான்ஸ்' என்பது சினிமாவுக்கும் கதைகளுக்குமான விஷயமாக இப்போதும் கருதுபவர்கள் இருக்கிறார்கள். 'நான் ரெடி, நீங்க ரெடியா?' என்று எந்த மனைவியும் கணவனிடம் நேரடியாக அல்ல, மறைமுகமாகக்கூடக் கேட்கத் தயங்குகிற காலமாகத்தான் இன்றும் இருக்கிறது. ஒரு முழம் பூ, நாலு வரிக் கவிதை, பிரியமான ஒரு சொல், செல்லமாச் ஒரு தட்டல், எதிர்பாராத முத்தம், கிளுகிளுப்பான ஒரு கிள்ளல் என்று எத்தனையோ சம்பவங்கள் நம்மைச் சுற்றிலும் சந்தோஷப்பட வைக்க நிறைந்திருக்கின்றன.
மாறிவரும் வேக யுகத்தில், வாழவேண்டிய தருணங்களை இப்படித் தவறவிட்டு விட்டோமே என்று வருத்தப்படாமல், ஒவ்வொரு நாளையும் முடிந்த அளவுக்கு சந்தோஷமாகவும் திருப்தியாகவும் மாற்றிக்கொள்ள உதவும் உற்சாக டானிக்கே ரொமான்ஸ்!
பரஸ்பரம் கணவனும் மனைவியும் புரிந்துகொள்ளவும், எளிய சிறுசிறு விஷயங்களால் சந்தோஷப்படவும்.....
For International Shipping Charges and Procedures Please check this link,
https://www.myangadi.com/international-shipping or call us @ 9597999274