
- Stock: In Stock
- Model: MAVI252
கபில்தேவ் தலைமையில் 1983ல் உலகக் கோப்பையை இந்தியா வென்றபோது டோனி இரண்டு வயதுக் குழந்தை! அண்மையில் நடைபெற்ற ட்வென்டி ட்வென்டி போட்டியில் உலகக் கோப்பையை நமது இந்திய அணி ஜெயித்தபோது டோனி 26 வயது இளைஞர். அணியின் தலைவர்! பிரமிக்க வைக்கும் வளர்ச்சி இது!
கிரிக்கெட் அதிகம் அறிமுகமில்லாத ஒரு மாநிலத்தில் பிறந்து, வளர்ந்து உலகத்தையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் அதிரடி ஆட்டக்காரர் டோனி. சமீபத்தில் இங்கிலாந்து பயணத்துக்குப் பின் திடீரென்று கேப்டன் பதவியிலிருந்து ராகுல் டிராவிட் விலகிவிட, 20_20 உலகக் கோப்பை அணியின் தலைமைப் பொறுப்பு டோனியின் வலிமைமிக்க தோளில் ஏற்றி வைக்கப்பட்டது. டோனியைப் பொறுத்தவரை இது சுகமான சுமை! புன் சிரிப்புடன் அதை ஏற்றுக்கொண்டு மிஸ்டர் கூல் மாதிரியாகச் செயல்பட்டு, தனக்குக் கீழ் விளையாடிய துடிப்புமிக்க இளம் வீரர்களை அரவணைத்து வெற்றிக் கனியைப் பறித்து வந்திருக்கிறார்!
For International Shipping Charges and Procedures Please check this link,
https://www.myangadi.com/international-shipping or call us @ 9597999274