
- Stock: In Stock
- Model: MAVI327
‘எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்’ என்ற பழமொழி, தலைக்குள் இருக்கும் மூளையைத்தான் குறிப்பிடுகிறது. மனித மூளை அதிசயமானது. அதன் செயல்பாடுகள் வியப்பானவை, புதிரானவை. மருத்துவ மேதைகளும் விஞ்ஞானிகளும் இன்னமும் தொடர்ந்து ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். நமது உடலை அடக்கியும் கட்டளைகள் பிறப்பித்தும் இயங்கும் மூளையைத் தலைமைச் செயலகமாகவே குறிப்பிடலாம். சுஜாதா _ ஊழலற்ற இந்தத் தலைமைச் செயலகத்தின் சுறுசுறுப்பான பணியை எளிய நடையில் புரியவைத்தார். மிகவும் நுணுக்கமான விஷயங்களைக்கூட வாசகர்கள் எளிதில் புரிந்து கொள்ளுமாறு எழுதிய சுஜாதாவின் தலைமைச் செயலகத்தை எத்தனை பாராட்டினாலும் தகும்! இந்தப் புத்தகத்தைப் படிக்கும் வாசகர்களும் இதை ஒப்புக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
For International Shipping Charges and Procedures Please check this link,
https://www.myangadi.com/international-shipping or call us @ 9597999274