- Stock: In Stock
- Model: MABH013
குங்குமம் வார இதழில் இலட்சக்கணக்கான வாசகர்களால் விரும்பி வாசிக்கப்பட்ட ’இனிக்குது கணக்கு’ தொடரின் நூல் வடிவம்.
கணித ரகசியங்கள் எளிதாய் வெளியிடப்படுகிறது!
பல கடினமான கணக்குகளையும் நொடியில் விடை சொல்ல வைக்கும் ஆற்றலை ஏற்படுத்தும் நூல்.
நூல் குறித்து குங்குமம்(24.09.2012) இதழில் வந்த விமர்சனம்:
குங்குமம் இதழில், இனிக்குது கணக்கு என்ற பெயரில் வெளிவந்து வாசகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற தொடரின் நூல் வடிவம். கணக்கென்றால் பிணக்கு என்ற மாயையைத் தகர்த்து, மிகப்பெரும் கணக்குகளுக்கும் நொடிப்பொழுதில் விடை சொல்லும் சூட்சமங்களைக் கற்றுத்தரும் இந்நூல், எல்.கே.ஜி முதல் எஞ்சினியரிங் வரை எல்லாத் தரப்பு மாணவர்களுக்கும் பயன்படும். எவ்வித உபகரணங்களும் இல்லாமல் அதிவேகத்தில் விடை கண்டறியும் நுட்பத்தையும் கற்றுத் தருகிறார் நூலாசிரியரான மூத்த பத்திரிகையாளர் ஆர்.உமாசங்கர்.
For International Shipping Charges and Procedures Please check this link,
https://www.myangadi.com/international-shipping or call us @ 9597999274