- Stock: In Stock
- Model: MABH025
படிப்பிலும், பண்பிலும் குழந்தைகளை வளர்ப்பது ஒரு
மிகப்பெரிய சவால். அந்தச் சவாலை திறமையாகச் சமாளித்து
சிறந்த பெற்றோராய் நிலைபெற இந்த நூல் வழிகாட்டுகிறது.
உங்க குழந்தை படிப்பில் ஆர்வம் இல்லாமல்
இருக்கிறதா? வாசிப்பில் விருப்பம்
காட்டுவதில்லையா? எழுதத் தடுமாறுகிறதா?
கவலைப்படாதீங்க, இந்த நூல் வழிகாட்டும்.
பணத்தோட அருமை தெரியாம குழந்தை
வளர்கிறதா? சேமிப்பைப் பற்றிய
அடிப்படையே தெரியாமல் இருக்கிறதா?
பயப்படாதீங்க, இந்த நூல் நெறிப்படுத்தும்.
குழந்தை சண்டியாய் வளர்கிறதா?
பழக்க வழக்கங்கள் சரியில்லையா?
பகிர்தல், ஈகை பற்றித் தெரியலையா?
இந்த நூல் சரியாக்கும்.
பிறரோடு பழகத் தெரியாமல் குழந்தை
தடுமாறுகிறதா? பொது இடங்களில்
பதுங்குகிறதா? பிறரை மதிக்கத் தெரியாமல்
வளர்கிறதா? டென்ஷன் வேண்டாம்,
இந்த நூல் பக்குவப்படுத்தும்.
குழந்தைக் கடத்தல் திகிலூட்டுகிறதா?
ஆபத்தை எண்ணி மனம் பதறுகிறதா?
அமைதியாய் இருங்க, இந்த நூல் தைரியப்படுத்தும்.
இந்த நூலை நீங்க படிங்க! பிள்ளைகளைப் பற்றிய
கவலையை விடுங்க!
For International Shipping Charges and Procedures Please check this link,
https://www.myangadi.com/international-shipping or call us @ 9597999274