
- Stock: Instock (Ships Immediately)
- Model: MAVI483
மேம்போக்கான சிந்தனையில் மிதந்துகொண்டும்,ஆரோக்கிய வாழ்வுக்கான அடையாளங்களை அடமானம் வைத்துக்கொண்டும் இருக்கும் இன்றைய இளைய சமுதாயம்,விவசாய நிலங்களையும் விட்டுவைக்கவில்லை.‘உயர் விளைச்சல்’ என்ற ஆசையில் ரசாயன உரம், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி என்று,செயற்கை இடுபொருட்களின் மூலமும், இயற்கைக்கு மாறான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும் மண்ணின் உயிர்ச்சத்துகள் உறியப்படுவது தொடர்கதையாகிவிட்டது.வெத்து மண்ணாக இருந்த மொத்த மண்ணும்,சத்துமிக்க மண்ணாக மாறும் காலம் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது.
ஆம்! பசுஞ்சாணம்,வைக்கோல், கால்நடைகளின் கழிவு என, விளைநிலத்தில் இயற்கை வழி இடுபொருட்களையே உரங்களாக மாற்றி,நாட்டு ரக விதைகளை நட்டு, சமவெளித் தொடங்கி மலைப் பிரதேசங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் வெள்ளாமை செய்வதற்கான எளிய முறைகளை, இந்த நூல் நமக்குக் கற்றுத் தருகிறது.மேலும், இயற்கை விவசாயத்தில் குழியடிச்சான், மாப்பிள்ளைச் சம்பா, கூம்பாலை, சூரக்குறுவை, கருங்குறுவை, சீரகச்சம்பா என்று பாரம்பரிய நெல் ரகங்களைக் கொண்டு விளைச்சல் செய்துவரும் விவசாயப் பெருமக்களின் உழவு அனுபவங்கள் இந்த நூல் முழுவதும் விரவி இருக்கின்றன.கடந்த பல மாதங்களாக ‘பசுமைவிகடனி’ல் ‘மகசூல்’ என்ற தலைப்பில் நூலாசிரியர் காசி.வேம்பையன் எழுதி வெளிவந்த, இயற்கைவழி விவசாய அனுபவங்களில் தேர்ந்தெடுத்த தொகுப்பின் மொத்த பதிப்பு இது.இயற்கையோடு இயற்கையாக இணைந்து செயல்பட்டு,வளத்தின் அடிப்படையில் வருமானத்தைப் பெருக்க விரும்பும் விவசாயப் பெருமக்களுக்கான விவசாய வழிகாட்டி,இந்த நூல்.
For International Shipping Charges and Procedures Please check this link,
https://www.myangadi.com/international-shipping or call us @ 9597999274