
- Stock: In Stock
- Model: MAVI200
இன்றைய சூழ்நிலையில் விவசாயம் செய்து லாபம் பார்ப்பது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது. விலைவாசி ஏற்றத்தாலும், நவீன பொருளாதார மாற்றத்தாலும் மண்ணை நம்பி வாழும் சாதாரண, நடுத்தர விவசாயக் குடும்பத்தினர்கள் அன்றாடத் தேவைகளைச் சமாளிக்கவே திக்குமுக்காடிப் போகிறார்கள். அவர்களுக்குத் தொடர்ச்சியான வேலையோ, சீரான வருமானமோ கிடைப்பதில்லை. வறட்சி, வெள்ளம், காற்று என்று இயற்கையின் பாதிப்பாலும், பூச்சி, புகையான், வண்டு போன்ற நோய்த் தாக்கு தலாலும், ஆள் பற்றாக்குறையாலும், உற்பத்திக்கு ஏற்ப விலை கிடைக்காமலும் விவசாயத் தொழில் நசிந்து வருகிறது.
உரிய வாழ்வும் வளர்ச்சியும் இல்லாததால், விவசாய வேலை செய்தவர்கள் வாழ வழி தேடி, நகரங்களில் கட்டடங்கள் கட்டுதல், கட்டடங்களுக்கு பெயிண்டிங் வேலை செய்தல், பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் காவல் புரிதல் என்று ஊர் ஊராக பெரும் நகரங்களுக்கு இடம்பெயர்வதும் கண்கூடு. அப்படிப்பட்டவர்களுக்கு, சிறு முதலீட்டில் தங்கள் ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தி, ஆண்டு முழுவதும் வருமானம் தரக்கூடிய வாழ்க்கை-வசதியை அமைத்துக்கொள்ள இந்த நூல் எடுத்துச் சொல்கிறது. தேனீ, காடை, புறா, வாத்து, வான்கோழி, கின்னிக் கோழி, காளான் என்று இவற்றை வளர்ப்பதை, பொழுதுபோக்காக, விளையாட்டாக, மனது லயித்து இந்த வேலைகளைச் செய்யலாம். வருமானத்தையும் ஈட்டலாம். அதோடு தாங்களே தொழிலதிபராக இருக்கலாம். அதற்கு வழிகாட்டும் மகத்தான நூல் இது!
For International Shipping Charges and Procedures Please check this link,
https://www.myangadi.com/international-shipping or call us @ 9597999274