
- Stock: In Stock
- Model: MAVI516
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டத்தைக் கவிதையாகக் கண்டவர் கவிஞர் வைரமுத்து. எது, எத்தகையது என்பது நம் பார்வையில்தான் இருக்கிறது. ஒரே வரிசையில் வைக்க முடியாத வெவ்வேறு விஷயங்களின் ‘மெய்ப்பொருள்’ காணும் முயற்சியாக இந்தக் கதம்பக் கொத்தை நூலாக்கி இருக்கிறார் நெல்லை விவேகநந்தா.
பூமியைப் படைத்த பெருந்தகையின் பின்னணி, உலகப்போரில் கொடுங்கோலன் ஹிட்லரின் நிலை, வைரத்தின் வீரியத்தை விவரிக்கும் ‘வைரம் வந்த கதை’, விண்வெளியில் நடந்த முதல் அதிசயம், வியக்கவைக்கும் சீனப் பெருஞ்சுவர், உலக அழகிப் போட்டி பிறந்த கதை, குங்குமப்பூவின் உண்மையான குணாதிசயம், தாயைப் புறக்கணித்த காமராஜர், காதலனுக்கு, காதலி கட்டிய நினைவுச்சின்னம், கிளுகிளுப்பை உண்டாக்கும் விருந்து! என அனைத்துத் தரப்பினரும் அறிந்துகொள்ளக்கூடிய சுவாரஸ்யமான தகவல்கள் தொகுக்கப்பட்டு ஒரே நூலாக வெளிவந்திருப்பது இந்த நூலுக்கே உரிய சிறப்பு.
மேலும், ‘சில சந்தேகங்களும் தீர்வுகளும்!’ என்ற தலைப்பில், மக்களின் பல்வேறு மூடநம்பிக்கைகளைச் சுட்டிக்காட்டி, அதற்கான சரியான விளக்கத்தையும் தந்திருப்பது, இந்த நூலின் தனித்தன்மையை எடுத்துக்காட்டுகிறது. பள்ளி, கல்லூரி, போட்டித் தேர்வு, பொது அறிவு என விதவிதமான தகவல்களை ஒருங்கே தொகுத்து அறிவுக் களஞ்சியமாக வெளிவந்திருக்கும் இந்த நூல், மாணவர்கள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பினரின் அறிவு விசாலத்துக்கும் நிச்சயம் துணை புரியும்!
For International Shipping Charges and Procedures Please check this link,
https://www.myangadi.com/international-shipping or call us @ 9597999274