
- Stock: In Stock
- Model: MABH007
எந்தப் பின்புலமும் இல்லாமல், கனவுகளோடு சென்னைக்குக் கிளம்பிவந்து வெற்றியடைந்த, பலரது முதல் முகவரியைத் தேடி !
முகவரியைச் சொன்னவர்கள்!
ஏ.பத்மசிங் ஐசக்- (ஆச்சி மசாலா)
அமீர்(திரைப்பட இயக்குநர்)
கவிஞர் அறிவுமதி,
சி.கே.ரங்கநாதன்(கெவின்கேர்)
ஆர். சந்திரமோகன் (ஹட்சன் அக்ரோ )
தேவிபாலா (எழுத்தாளர்)
வே. கணேசன் (பொன்னுச்சாமி ஹோட்டல்)
ஜாங்கிட் ஐ.பி.எஸ்
ச. நடராஜன் (ஜான்சன்ஸ்)
பி.சி.ஜெயராமன் (ஸ்ரீ குமரன் ஸ்டோர்ஸ்)
கருணாஸ் (நடிகர்)
கஸ்தூரிராஜா (திரைப்பட இயக்குநர்)
லிங்குசாமி (திரைப்பட இயக்குநர்)
நடிகர் லிவிங்ஸ்டன்,
நர்த்தகி நட்ராஜ் (பரத நாட்டியக் கலைஞர்)
கவிஞர் பழநிபாரதி,
சடையாண்டி மூப்பனார் (போத்தீஸ்)
நடிகர் ராஜேஷ்,
சமுத்திரக்கனி (திரைப்பட இயக்குநர்)
சரவணன் (நடிகர்)
சசி (திரைப்பட இயக்குநர்)
சசிக்குமார் (திரைப்பட இயக்குநர்)
தனபாலன் (தலைப்பாக்கட்டி பிரியாணி)
திருநாவுக்கரசு (வானதி பதிப்பகம்)
வியட்நாம் வீடு சுந்தரம் (கதாசிரியர்)
மனம் திறந்து, தங்கள் ஏற்ற இறக்கங்களை,
நிறை குறைகளைப் பதிவு செய்திருக்கிறார்கள். சென்னையின் பலமுகங்களைத் தரிசனமாக
உணர்த்துகிறது இவர்களின் வாழ்க்கைச் சித்திரம்.
நூல் குறித்து தினத்தந்தி (05.06.2013)செய்தித்தாளில் வந்த விமர்சனம்:
வாழ்வில் சிகரத்தை எட்டிய பலர், முறையாகச் செதுக்கப்பட்ட படிகளில் ஏறி அந்த உயரத்தை எட்டிவிடவில்லை. தங்களுக்கான படிக்கட்டுகளை தாங்களே செதுக்கித்தான் உச்சிக்குப் போயிருக்கிறார்கள். நம்பிக்கையை மட்டுமே துணைக்கு வைத்துக் கொண்டு, புத்திசாலித்தனமான உழைப்பை மட்டுமே தோழனாக்கிக்கொண்டு தங்கள் கனவுகளை நனவாக்கி யிருக்கிறார்கள். எண்ணற்றோருக்கு முன்மாதிரியாகவும் ஆகியிருக்கிறார்கள்.
அப்படி சென்னைக்கு கனவுகளை மட்டும் சுமந்து வந்து, அவற்றை நனவாக்கிக் காட்டியவர்களின் வாக்குமூலத் தொகுப்பு இது. சாதனையாளர்களின் முதல் முகவரி அடிப்படையில் சாதித்த சரித்திரங்கள் விரிகின்றன. ஒவ்வொருவரும் நேரடியாகப் பேசுவது போன்ற உணர்வு, நூலாசிரியரான பத்திரிகையாளர் வெ.நீலகண்டனின் எழுத்து நடைச் சிறப்பு, வாழ்வில் முன்னேறத் துடிப்போருக்கு வேதமாகும், இந்த புத்தகம்.
For International Shipping Charges and Procedures Please check this link,
https://www.myangadi.com/international-shipping or call us @ 9597999274