- Stock: Instock (Ships Immediately)
- Model: MAVI033
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'நீயா? நானா?' நிகழ்ச்சியில் சூடான விவாதங்களை வாரம்தோறும் நடத்திக் கொண்டிருக்கும் கோபிநாத், ஆனந்த விகடன் இதழில் 'நீயும் நானும்!' என்ற தலைப்பில் தொடர் எழுதத் துவங்கியபோதே இளைஞர்கள் ஆர்வமுடன் வரவேற்றார்கள். 'நம்மை நல்ல திசையில் அழைத்துச் செல்லவும், ஆலோசனை சொல்லவும் நல்ல நண்பர் ஒருவர் இருக்கிறார்' என்ற எண்ணம் பல இளைஞர்களுக்கு ஏற்பட்டு, தங்கள் எனர்ஜி அதிகரிப்பதாக உணர்ந்தார்கள். ஒவ்வொரு கட்டுரையிலும், மிகுந்த அக்கறையோடு, சமூகப் பிரச்னைகளை எடுத்துக்கொண்டு அழகாகவும் ஆழமாகவும் அலசியிருக்கிறார் நூலாசிரியர் கோபிநாத். சில கட்டுரைகள் தன்னம்பிக்கையை விதைக்கின்றன. சில, சீரிய பண்புகளை மனதில் பதிக்கின்றன. சில, போராட்ட குணத்தை வளர்க்கின்றன; வெற்றி அடைய வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்துகின்றன. இருந்தாலும் ஒட்டு மொத்தமாக கட்டுரைகளைப் படிக்கும்போது, இது வெறும் சுயமுன்னேற்றப் புத்தகம் என்று கூறிவிட முடியாத அளவுக்கு சமூக தாக்கம் மேலிட எழுதப்பட்டு இருக்கிறது என்பதை உணரமுடியும்! வாசிப்பதற்குச் சுவையாகவும், புரிந்துகொள்வதற்கு எளிமையாகவும், சிந்திப்பதற்குப் புதிதாகவும் படைக்கப்பட்ட நூல் இது.
For International Shipping Charges and Procedures Please check this link,
https://www.myangadi.com/international-shipping or call us @ 9597999274