ஆன்மிக ஞானி ஆதிசங்கரர்
Rs65.00
- Stock: In Stock
- Model: MAVI334
ஆன்மிக சிந்தனையும், தத்துவ கோட்பாடுகளும், வழிபாடுகளும் ஆதிகாலம் முதலே வழி வழியாக பல்வேறு நிலைகளில் வளர்ந்து வந்திருக்கின்றன. வெவ்வேறு காலக்கட்டங்களில் அற்புத மகான்கள் இந்தப் பூவுலகில் தோன்றி ஆன்மிகத்தை வளர்ப்பதும், அதில் மக்களை ஆர்வம் கொள்ளச் செய்வதும், மனித சமுதாயத்துக்குப் பயனளிக்கும் ஒன்றாகவே இருந்து வருகிறது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பிறந்த சங்கரர் ஏழு வயதுக்குள் நான்கு வேதங்களையும் கற்று புலமை பெற்றார். அந்தக் காலக்கட்டத்தில் இந்து மதம் பல தாக்கங்களால் நசிந்து இருந்ததை உணர்ந்த சங்கரர், தன் எளிய விளக்கத்தாலும் கோட்பாட்டாலும் இந்து மதத்தை எப்படி எழுச்சி பெற வைத்தார் என்பதை சீரிய நடையில் விளக்குகிறது இந்த நூல். ஆதிசங்கரரின் மேன்மையையும், பிரமிக்க வைக்கும் பல சாதனைகளையும் சொல்லி, அந்த மகான் வாழ்ந்து காட்டிய ஆன்மிக வாழ்க்கையை இந்த நூலில் சுவைபட விவரித்திருக்கிறார் நூலாசிரியர் கே.எஸ்.ரமணா. காலைக் கவ்விப் பிடித்த முதலை வாயிலிருந்து சங்கரர் விடுபட்டது... நர்மதை நதியை வீட்டுக்கருகில் வரவழைத்தது... சன்னியாசியாக இருந்தும் தாயின் பூத உடலை வீட்டுக்கருகில் தனியாக எரியூட்டியது... புலையன் வடிவில் வந்தது மகேசனே என தெளிவு பெற்றது... உமி தீமூட்டி தீக்குள் புக இருந்த குமரிலபட்டரை தடுத்து நிறுத்தியது... என சங்கரரின் அற்புத செயல்களை, இந்த நூலில் படிக்கப் படிக்க மெய் சிலிர்க்கிறது! ஞான ஒளியாகத் திகழ்ந்த ஆதிசங்கரரின் வாழ்க்கைச் சம்பவங்கள், அனைவர் மனதிலும் ஆன்மிக சிந்தனையைக் கிளறிவிட்டு, நன்னெறிகளைப் போதித்து, நல்வழிப்படுத்தும் என்பது உறுதி.
For International Shipping Charges and Procedures Please check this link,
https://www.myangadi.com/international-shipping or call us @ 9597999274