- Stock: In Stock
- Model: MAVI341
விந்தைகள் நிறைந்ததுதான் சித்தர்களின் வாழ்க்கை. வாழுங்காலத்தில் அவர்கள் தன்னலமற்று வாழப் பழகிக் கொண்டவர்கள். சாதி பேதத்தைக் கடந்த அந்த யோகிகள், உலகில் உள்ள அத்தனை உயிர்களும் பசிப்பிணி அற்று, நல்வாழ்வு வாழ வேண்டும் என்று பிரயாசை கொண்டவர்கள். சித்தர்களது வாழ்க்கை விசித்திரமானது. அவர்கள் உபதேசித்த பொன்மொழிகள் யாவும் மக்கள் நல்வாழ்வு வாழ வழி சொல்லும் மந்திரங்களாக இருக்கின்றன. அதை பல இடங்களில், பல வழிகளில் நிறைவேற்றவும் செய்தார்கள். ஆனாலும், சில நேரங்களில் சித்த நிலையை விலக்கி வைத்தும் வாழ்ந்திருக்கிறார்கள்; மக்களின் நலனுக்காகவே அந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள் என்பது இந்த நூலை வாசிக்கும்போது உணர்ந்துகொள்ள முடியும். சித்தர்களின் வாழ்க்கை பற்றிய இந்தக் கட்டுரைகள் சக்தி விகடன் இதழில் வெளிவந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றன. சித்தர்கள் பற்றி பல வெளிவராத தகவல்களை இந்தக் கட்டுரைகளில் தென்னாடுடையான் என்ற புனைபெயரில் பி.என்.பரசுராமன் எழுதினார். கதைப்போக்கில் செல்லும் அவரது நடை, சித்தர்கள் பற்றிய அரிய தகவல்களை எளிய முறையில் விளக்குகிறது.
For International Shipping Charges and Procedures Please check this link,
https://www.myangadi.com/international-shipping or call us @ 9597999274